
‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் – இன்று (01) முதல் மீண்டும் தொடங்கும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளின் மாணவர்களும் இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீண்டும் பயனடைய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுரக்ஷா திட்டமானது 4.5 மில்லியன் மாணவர்களுக்கு உடல்நலம், விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டை வழங்கும்.
உள்ளக சிகிச்ச பெறுபவருக்கு 300,000 ரூபாய் வரையிலும், வெளி சிகிச்சைக்கு 02 லட்சம் ரூபாய் வரையிலும், தீவிர நோய் சிகிச்கைக்காக 1.5 மில்லியன் ரூபாய் வரையிலும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
விபத்தின் மூலம் உடல் இயலாமை ஏற்படின் 25,000 ரூபாய் முதல் 200,000 ரூபாய் வரையில் வழங்கப்படும். ஆயுள் காப்புறுதியாக மாணவரின் பெற்றோர் இறந்துவிட்டால் அந்தக் குழந்தையின் குழும்பத்துக்கு 75,000 ஆயிரம் தொடக்கம் அதிகபட்சம் 225,000 வரை வழங்கப்படும்.
இதன்படி ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டத்துக்காக 03 வருடங்களுக்கு 7.1 மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதிக்கியுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு – இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. மேலும், இன்று முதல் இணையத்தளத்தின் ஊடாக இதற்கான நன்மைகள் வழங்கப்படுகின்றன.



