
– பாறுக் ஷிஹான் –
தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 05 நபர்களை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.
கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் சந்தேகெ நபர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை சாய்ந்தமருது – பொலிவேரியன் கிராமத்தில், பெண் ஒருவரின் தந்தையை, அவரின் கணவர் தாக்கி கொலை செய்தார்.
சம்பவத்தில் 62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவர் உயிரிழந்தார்.
இறந்தவரின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
தொடர்பான செய்தி: சாய்ந்தமருதுவில் கொலை: சந்தேக நபர் தலைமறைவு



