தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவதற்கு அங்கிகாரம்

னாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

‘ஒன்றிணைந்து வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று கம்பஹாவில் இன்று (21) இடம்பெற்ற பேரணியின் போது, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் எனும் பிரேரணையினை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்தார்.

இதன்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் கைகளை உயர்த்தி இந்த பிரேரணை அங்கிகரித்தனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை வரும் வாரம் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க; “அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியலை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரை தனது பயணத்தில் இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.