ஜனாதிபதியாக மைத்திரி பதவி வகித்த போது, 05 வீடுகள் உட்பட 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 July 21, 2024

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட ‘ஸ்வர்ணபூமி’ உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. இவ்வாறு மைத்திரி கையகப்படுத்திய பத்து சொத்துக்களில் 05 வீடுகளும் உள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் தொகையை செலுத்தி முடிப்பதற்கு மேலதிக கால அவகாசத்தை, அவரின் சட்டத்தரணிகள் கோரியபோது – இந்த விடயத்தை சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன முன்வைத்தார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதாக்கள் சார்பாக ஆஜரான சஞ்ஜீவ ஜயவர்தன; “ஜனாதிபதி பதவியை வகித்துக்கொண்டு – எப்படி இவ்வளவு சொத்துக்களை ஒருவர் குவிக்க முடியும்” என கேள்வியெழுப்பினார். இது ஊழலை வெளிப்படுத்துவதாகக் கூறிய அவர், இது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடுமாறு பாதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

தொடர்பான செய்தி: தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிக்க, 2033 வரை அவகாசம் கோரி மைத்திரி மனுத்தாக்கல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்