ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

🕔 July 17, 2024

னாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் எந்த வகையான தேர்தலை நடத்துவதற்குமான செலவாக 10 பில்லியன் ரூபாய் நிதி, 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில்ட ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் அரசாங்கம் செயற்படுவதால், நிதி வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“முதற்கட்ட செலவுகளாக தபால், அச்சிடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதியை வழங்குவதற்கு அமைச்சு தயாராக உள்ளது. பின்னர், தேர்தல் செலவுக்கு தேவையான மீதமுள்ள நிதி விடுவிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்