தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிட 60 கோடி ரூபாய் செலவாகும்

னாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.

எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலுக்கும் – அரச அச்சகத் திணைக்களம் தயாராக உள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 லட்சம் வாக்குச் சீட்டுக்களை அச்சிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குத் தேவையான பணியாளர்கள் அரச அச்சகத் திணைக்களத்திடம் உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்புக்கமைய, எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது