தலைப்புச் செய்திகள்

சுகயீன போராட்டத்தின் போது வேலைக்கு வந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு எவ்வளவு: தகவலை வெளியிட்டார் பந்துல

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இணைந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள சம்பள அதிகரிப்புத் தொகை தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

நேற்றும் (09) நேற்று முன்தினமும 200க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில், குறித்த நாட்களில் வேலைக்குச் சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது.

இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன; ,இந்த சம்பள உயர்வு தரம் 3(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு 525 ரூபாய் வழங்கப்படும் என்றும், தரம் 2(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு1,335 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும், தரம் 1 இல் உள்ளவர்களுக்கு 1,630 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இந்த சம்பள உயர்வு அவர்களின் ஓய்வூதியத்தில் தாக்கம் செலுத்தாது என்றும், குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது – பணிக்கு வந்த அனைவருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.