ஆளுநர்களை பிழை கூறும் தேர்தல்கள் ஆணைக்குழு, முஜிபுர் ரஹ்மான் விடயத்தில் மௌனமாக இருப்பது ஏன்: மஹிந்தானந்த கேள்வி

🕔 July 10, 2024

க்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மானை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமனற உறுப்பினராக நியமிக்க – தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (10) நாடாளுமன்றத்தில் விமர்சித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை – எவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு நியமித்தது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

“மாகாண ஆளுநர்கள் – ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிப்பது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு பேசுகிறது. உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை ஆளுநர்களின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிப்பது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் முஜிபுர் ரஹ்மான் – தேசியப் பட்டியல் ஊடாக நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மௌனமாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சட்டரீதியாக தான் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். உள்ளாட்சி தேர்தலை அரசாங்கம் நடத்தும் என நான் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன். தேர்தல் நடைபெறாததால், மீண்டும் நாடாளுமன்றம் வர முடிவு செய்தேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்