ஞானசாரர் பிணையில் விடுதலை

🕔 February 9, 2016

Gnanasara thero - 012பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, இன்று 09 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில், கடந்த 26 ஆம் திகதி முதல் வெலிக்கடை சிறைச்சாலையில் ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று செவ்வாய்கிழமை ஹோமாகம நீதிமன்றில் ஞானசார தேரர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்