
போலி நாணயத்தாள்களை அச்சடித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் 06 போலி 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் செவ்வாய்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய பல உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் மூலம், மேலும் மூன்று சந்தேக நபர்களை போலி நாணயத்தாள்களுடன் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் 08 போலியான 5000 ரூபாய் நோட்டுகளும், 149 போலியான 500 ரூபாய் நோட்டுக்களும் மொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19, 49 மற்றும் 54 வயதுடைய ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.



