டயானா கமகேவுக்கு எதிரான வழக்கிலிருந்து இரண்டு நீதியரசர்கள் விலகுவதாக அறிவிப்பு

🕔 June 27, 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை பரிசீலிப்பதில் இருந்து – உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள்ளனர்.

வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தாக்கல் செய்த மனுவில், டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர், அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாககுற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று (26) உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசகர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும், நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மனுவை ஓகஸ்ட் 05ஆம் திகதி அழைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்