கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

🕔 June 19, 2024

விளக்கமறியலில் தற்போது வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக, லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில், அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை, அவர் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் திரும்பவும் வழங்காமல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

பொதுமக்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்