மஹிந்தானந்த – குணதிலக்க மோதல் குறித்து, எம்.பிகளிடம் விசாரிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு

🕔 June 6, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக, நாடாளுமன்றத்துக்கு கொழும்பு கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது மேற்படி நாடாளுமுன்ற உறுப்பினர்கள் இருவரும் மோதிக்கொண்டனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

கட்சி கூட்டத்தின் போது – தனது தந்தையை மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கியதாக குணதிலக்க ராஜபக்ஷவின் மகன் கொழும்பு கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டின் அடிப்படையில், கொழும்பில் உள்ள ராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குணதிலக்க ராஜபக்ஷவிடம் பொலிஸார் நேற்று (05)வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து, இந்த மோதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களைப் பெறுவது அவசியம் என கோட்டை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை, கோட்டை பொலிஸார் புதன்கிழமை (ஜூன் 05) நாடாளுமன்றத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்