நான்கு வயது குழந்தையை கொடூரமாகத் தாக்கிய நபரும், இரண்டு பெண்களும் கைது

🕔 June 5, 2024

நான்கு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குகுல் சமிந்த எனப்படும் – பிபிலை சமிந்த என்ற சந்தேக நபர், அவரின் மனைவி மற்றும் மற்றுமொரு பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் 04 வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து – பொலிஸார் விசாரணைகளை தொடங்கினர்.

குறிப்பிட்ட சந்தேகநபர் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோவை – அயலவர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவு செய்திருந்தார்.

வெலிஓயா – பதவிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பொலிஸார் வருவதற்குள் தனது வீட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் 45 வயதுடைய சந்தேக நபர் இன்று (05) அதிகாலை புல்மோட்டை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படை மற்றும் வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான குழந்தையையும் தங்கள் காவலில் எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் இன்று (05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்