தனி நாடாக அங்கிகரித்த பலஸ்தீனத்தின் தலைநகர், கிழக்கு ஜெருசலமாக அமைய வேண்டும்: ஸ்பெயின் பிரதமர் வலியுறுத்தல்

🕔 May 28, 2024

ருங்கிணைந்த மற்றும் புவியியல் ரீதியாக இணைக்கப்பட்ட பாலஸ்தீன் நாடு தொடர்பான தனது கருத்தை, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வலியுறுத்தினார்.

“மேற்குக் கரை மற்றும் காஸா ஆகியவை இணைந்தாக – பாலஸ்தீன நாடு இருக்க வேண்டும். கிழக்கு ஜெருசலம் அதன் தலைநகராக இருக்க வேண்டும்” என்று சான்செஸ் கூறியுள்ளார். மேலும் “பாலஸ்தீன தேசிய அதிகார சபையின் – சட்டபூர்வ அரசாங்கத்தின் கீழ், இந்த நாடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுடனான உறவுக்காக பலஸ்தீனத்தை அங்கிகரிக்கும் விடயத்தில் ஸ்பெயின் சமரசம் செய்யாது என்றும், இஸ்ரேலை நட்பு தேசமாக ஸ்பெயின் கருதுகிறது எனவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் சான்செஸ்; இஸ்ரேலுடன் பலமான சாத்தியமான உறவை வளர்ப்பதற்கு ஸ்பெயின் விரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை பயங்கரவாத அமைப்பாக கருதும் ஹமாஸை – ஸ்பெயின் தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கிகரிப்பதாக ஏற்கனவே அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை அறிவித்திருந்த நிலையிலேயே, மீண்டும் பலஸ்தீனம் தொடர்பான தனது கருத்தை ஸ்பெயின் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்பான செய்தி: பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கிகரிக்கின்றோம்: அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்