தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்

🕔 May 27, 2024

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கவில்லை என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் – அதற்கான நிதியை ஜனாதிபதி ஒதுக்க வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்காக, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி – ஜனாதிபதி தேர்தலை நடத்தும் நோக்கிலேயே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல். ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்