தலைப்புச் செய்திகள்

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு

ரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தையே கோட்டாபய ராஜபக்ஷ கையேற்றதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட பலமான அரசாங்கத்தை அவர் பொறுப்பேற்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க தீவிர சதி நடைபெற்று வந்ததாகவும், அந்த சதியில் அரசாங்கத்திற்குள்ளேயே பல சக்திகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“அந்த சதி உள்நாட்டில் இருந்தது, சர்வதேச சக்திகள் மற்றும் பயங்கரவாத குழுக்களும் அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்தன. இதன் விளைவாக, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ கட்டியெழுப்பிய பலமான அரசாங்கத்தை கோட்டாபய ராஜபக்ஷ கையேற்கவில்லை. அவர் சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தையே பொறுப்பேற்றார்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (26) தலாவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ -மேற்படி விடயங்களை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட போதிலும், அவர் உரையாற்றவில்லை.