கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 April 22, 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

போலியான இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெஹலிய – தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மே 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிஐடியினரால் கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, பெப்ரவரி 03ஆம் திகதி தொடக்கம் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி மருந்து மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் 08 பேருக்கும் விளக்க மறியல் மே 06 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்