மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி

🕔 April 2, 2024

ரச பாடசாலைகளிலுள்ள மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்களை வழங்கும் திட்டமொன்று இம்மாதம் ஆரம்பமாகிறது.

இதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மொத்தம் 04 மில்லியன் பேர் அரச பாடசாலைகளில் கற்கின்றனர். அவர்களில் 1.2 மில்லியன் மாணவிகள் பூப்படைந்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்களில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் வறுமைப்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற 800,000 மாணவிகளுக்கு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் – ஆண்டுதோறும் மாதவிடாய் நாப்கின்கள் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்