ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை

🕔 March 29, 2024

ந்தூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதியிடம் இருந்து மேற்படி பொலிஸ் சார்ஜன்ட் 500 ரூபாய் லஞ்சம் பெற்றிருந்தார்.

போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தருககு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுக்களிலும் பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 20,000 ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

அத்தோடு, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் லஞ்சமாகப் பெற்ற 500 ரூபாயினையும் அவரிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

Comments

புதிது பேஸ்புக் பக்கம்