தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் வேலைநிறுத்தம்

🕔 March 19, 2024

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்கள் இன்று (19) பல்கலைக்கழக முற்றலில் வேலைநிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் இதற்கு தலைமைதாங்கினார்.

பல்கலைக்கழக ஊழியர்களில் குறிப்பிட்ட தரப்பினர் இடையிடையே வேலைநிறுத்தத்தில் குதிப்பதால் – மாணவர்களின் கல்விநிலை உட்பட பல்வேறு செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில், நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாக – அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறான முழுநாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்கின்றன.

பல்கலைக்கழக சொத்துக்களை பாதுகாக்கும்பொருட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கடமைகளை மட்டுப்படுத்தப்பட்ட அவசியமான இடங்களில் மாத்திரம் வழங்கியுள்ளதாகவும், குறித்த கடமையின் நிமித்தம் சீருடைகளை அணியாது சாதாரண உடையில் அவர்கள் பணியாற்றுவதாகவும் ஏனைய அனைத்து விதமான சேவை வழங்கும் உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளில் இருந்து விலகியுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்