நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

🕔 March 14, 2024

லங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், 2020 ஆம் ஆண்டு போலவே, அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் கணிசமான பெரும்பான்மையைப் பெறக்கூடும் என்று அவர் வலியுறுத்தினார்.

சமநிலையான நாடாளுமன்றம் அமைவதற்கு – நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ராஜபக்ஷ கூறினார்.

மேலும், நாட்டின் முக்கியமான தேசியத் தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தற்போதைய அரசாங்கம் உண்மையிலேயே பொதுஜன பெரமுனைவை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பது குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்