சரத் பொன்சேகா சார்பில் வழங்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

🕔 March 4, 2024

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் கட்சியில் வகிக்கும் பதவிகளை இடைநிறுத்துவதற்கும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரி – ஆட்சேபனை மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐககிய மக்கள் சக்தி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (04) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா,இந்த விடயத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த ஆட்சேபனைகள் – இன்று பிற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான அறிவித்துள்ளார்.

அண்மையில் சரத் பொன்சேகா தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் கட்சியின் பொருளாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்பான செய்தி: சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்