பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை

🕔 March 2, 2024

கொழும்பு – ஹெவ்லொக் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பெண்ணை இன்று (02)அதிகாலை ஜமால்தீன் தாக்கியதாகவும், அதனையடுத்து அவர் காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் – முறைப்பாட்டுக்கு அமைய வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொள்ளுப்பிட்டி மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசங்களில் உள்ள ஜமால்தீனுடைய வீடுகளில் தீவிர சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான குறித்த பெண், அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்துக்குஅறிவித்து ஜமால்தீனுக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்