71 வயதில் மீண்டும் எம்.பி ஆகிறார் முத்துக்குமாரன

🕔 February 29, 2024

னுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி. முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளார்.

71 வயதுடைய முத்துக்குமாரன, கடந்தபொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட 71 வயதுடைய முத்துக்குமாரன, விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

1977ல் அரசியல் தொடங்கிய முத்துக்குமாரன – 1991ஆம் ஆண்டு கலாவெவ பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார். பின்னர்1993இல் வட மத்திய மாகாண சபைக்கு தெரிவானார்.

அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கலாவெவ தொகுதி கிளையின் உப தலைவராகவும் இவர் பதவி வகித்தார்.

மீண்டும் 1999ம் ஆண்டு வடமத்திய மாகாண சபைக்கு முத்துக்குமாரன தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு மாகாண விவசாய அமைச்சர் பதவி அவருக்குக் கிடைத்தது.

இதன் பின்னர் 2010ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து இவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்