ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தகவல்

🕔 February 29, 2024

னாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தினம், செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு இடையில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர்; ஜனாதிபதி தேர்தல் 05 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகவும், கடந்த 2019 நொவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டதால், அடுத்த தேர்தலை இந்த ஆண்டு நொவம்பருக்கு – இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி உள்ளது எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

“ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் பல திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் தங்கள் பங்களிப்பை செய்தால், நிதி மற்றும் தேர்தலை நடத்துவதில் எந்த பிரச்சனையும் இருக்காது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்