முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 98 வயதில் காலமானார்

🕔 February 28, 2024

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் 98ஆவது வயதில் நேற்று (27) மாலை காலமானார்.

நிதியமைச்சராக அதிக எண்ணிக்கையிலான வரவு -செலவுத் திட்டங்களை தாக்கல் செய்தவர் என்ற சாதனையை ரொனி டி மெல் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் 1977 முதல் 1988 வரை நிதி அமைச்சராக இருந்தார்.

இவர் தற்போதைய இலங்கை நிர்வாக சேவைக்கு ஈடான சிலோன் சிவில் சேவை (Ceylon Civil Service) அதிகாரியாக இருந்து – அரசியலுக்குள் பிரவேசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்