தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

🕔 February 26, 2024

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதோடு, அவற்றை தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு, பல்கலைக்கழக நினைவுச் சின்னத்துக்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் இன்று (26) இடம்பெற்றது.

ஆய்வரங்கு மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வுக்கு உள்ளூர் தனியார்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பிரதி நிதியாளர் என பலரும் வருகை தந்திருந்தனர்.

2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையான எதிர்காலத்திற்கான டிஜிட்டல் மாற்றம் (Digital Transformation for a Sustainable Future) எனும் தொனிப்பொருளிலான மேற்படி 12ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு – பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த மாநாட்டில் 200 ஆராச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்