இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம்

🕔 February 26, 2024

வுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கை சந்தைக்கு பெற்றோலிய பொருட்களை வழங்கும் பொருட்டு – இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் – வியாழக்கிழமை (22) இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன், இது தொடர்புடைய ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா குறிப்பிட்டுள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக – நாட்டல் எற்பட்ட எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, இலங்கை தனது சில்லறை எரிபொருள் சந்தையை அதிக வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்