சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது

🕔 February 20, 2024

பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்