இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி 95 வயதில் காலமானார்

🕔 February 17, 2024

லங்கை கடற்படையின் 07ஆவது தளபதி அட்மிரல் பசில் குணசேகர (Basil Goonesekara) இன்று (17) காலமானார்.

அவர் 1951 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி உப லெப்டினன்டாக ரோயல் இலங்கை கடற்படையில் சேர்ந்தார். 1973 ஜூன் 01 முதல் 1979 மே 31 வரை இலங்கை கடற்படையின் 07 வது தளபதியாக பதவி வகித்தார்.

மறைந்த அட்மிரல் பசில் குணசேகர 1929 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் பூதவுடல் நாளை 18ஆம் திகதி வரை கொழும்பு 06, அனுலா வீதி, இல. 50/06 இல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.

கடற்படை மரபுகளுக்கு அமைவாக பூரண மரியாதையுடன் நாளை 18ஆம் திகதி பொரளை மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்