முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

🕔 February 15, 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 பேரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) நீதிமன்றம் உத்தரவிட்டது.

கெஹலிய தவிர்ந்த 06 சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவில்லை.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது.

இந்தநிலையில், கடந்த 02ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்