துபாயிலிருந்து வந்திறங்கிய, சிசிலி கொத்தலாவல கைது

🕔 February 4, 2016

Sicille Kotelawala - 0111செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலயின் மனைவி சிசிலி கொத்தலாவல இன்று வியாழக்கிழமை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர் கைதாகினார்.

2009 ஆம் ஆண்டு இவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

எனினும், சிசிலி கொத்தலாவலவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கைளித்து விட்டதாக டிவரவு – குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஜெனரல் எம்.என். ரணசிங்க தெரிவித்தார்.

‘கோட்டன் கீ’ கடன் அட்டை கம்பனியின் பணிப்பாளர்களில் ஒருவரான சிசிலி கொத்தலாவல, அந்த நிறுவனம் சரிவடைந்தமையினை அடுத்து, நாட்டை விட்டும் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தகக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்