தேர்தல்கள் நடைபெறும் காலம் குறித்து, ஜனாதியின் ஊடகப் பிரிவு அறிக்கை

🕔 February 13, 2024

னாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்று – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான நிதி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் எனவும் ஊடகப் பிரிவின் அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments