அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து: இருவருக்கு காயம்

🕔 February 13, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – அனுராதபுரம் வீதியில் 15வது மைல் தூணுக்கு அருகில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் அளுத்கம – மேல் புளியங்குளத்தில் வசிக்கும் எச்.எம். ஹர்ஷன பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போதே – இந்த விபத்து நேர்ந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்து அதே திசையில் சென்ற கை டிராக்டரின் பின்புறம் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் கை டிராக்டரை ஓட்டிச் சென்ற நபரும், நாடாளுமன்ற உறுப்பினரின் காரை ஓட்டிச் சென்ற சாரதியும் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகன சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments