தலைப்புச் செய்திகள்

இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு

அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படங்களின்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் – கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட இஷாக் ரஹ்மான் மற்றும் பொதுஜன பெரமுன நாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்னே ஆகியோர் ஜனாதிபதியுடன் பயணித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் ஜனாதிபதியின் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இன்று ஆரம்பமாகிய இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்ரேலியா பயணித்துள்ளார்.