தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு

🕔 February 6, 2024

லங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 28 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் (பிறப்பு அல்லது திருமணம் மூலம்) என Manthri.lk இன் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 எம்.பி.க்களில், 66 எம்.பி.க்கள் குடும்பத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளனர்.

அவர்களில் 34 பேர் தற்போதைய அல்லது முன்னாள் எம்.பி.க்களின் பிள்ளைகளாவர், 04 பேர் பிள்ளைகளின் பிள்ளைகளாவர் (பேரப் பிள்ளைகள்), 07 பேர் – எம்.பிகளின் மூன்றாம் தலைமுறைகளாவர், 02 பேர் முன்னாள் எம்.பிகளின் பிள்ளைகளின் பிள்ளைகளாகவும் மூன்றாம் தலைமுறையினராகவும் உள்ளனர்.

மேலும் 16 பேர் முன்னாள் எம்.பி.யின் மருமகன்கள் அல்லது மருமகள்களாவர், 10 பேர் முன்னாள் அல்லது தற்போதைய எம்.பி.யின் உடன்பிறப்புகளாவர், 04 பேர் முன்னாள் எம்.பி.யின் மனைவிகளாவர்.

கணக்கெடுப்பின்படி, தற்போதை 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முன்னாள் முதலமைச்சர்களின் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் அல்லது பிள்ளைகள் அல்லது மனைவி ஆவர்.

06 எம்.பிகள் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களின் பெற்றோர் / உடன்பிறப்பு / பிள்ளை / மனைவி ஆவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்