புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

🕔 February 4, 2016

Hakeem - 0983ல்லாட்சியின் கீழ் ஜனநாயக மரபுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியின் பயனாக, புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும், இந்த சுதந்திர தினத்தின் போது இதனையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோடுர யுத்தமும், கொடுங்கோல் ஆட்சியும் முடிவுக்கு வந்த பின்னர் – நாட்டில் நல்லாட்சி நிலவும் வேளையில், இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் சகல இன மக்களாலும் மிகவும் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்படுகின்றது.

இனரீதியாகவும், சமயரீதியாகவும், மொழிரீதியாகவும் நாட்டு மக்களை வேறுபடுத்தி நோக்கிய அப்போதைய ஆட்சியாளர்கள் மண்கவ்வியுள்ள சூழ்நிலையில், எல்லா இன மக்களும் ஒற்றுமைப்பட்டு தேசிய அரசாங்கத்தின் கீழ் சுதந்திர தினத்தை வரவேற்பது சாலப் பொருத்தமானது.

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத்தும் பொருட்டு, அபிப்பிராயங்களைத் திரட்டுவதற்கான முன்னெடுப்புகள் பல்வேறு மட்டங்களிலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சகித்துக் கொள்ள முடியாத தீய சக்திகளின் தந்துரோபாயங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை, சுதந்திர தினத்தின் போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உற்சாகம் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்