அபிப்பிராயம் கோரல்: உத்தேச அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோரின் கரிசனைகள்

🕔 February 4, 2016

SEUSL - 01லங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவிட்டது.

அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகுவதனைத் தவிர்த்து, நாட்டில் நீண்டகால அமைதியினை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையோர் குறித்த கரிசனைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

இந்நிலையில், உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய சிறுபான்மையோர் குறித்த கரிசனைகளை வெளிக்கொண்டு வருவதும், அவை தொடர்பான யோசனைகளை தொகைப்படுத்தி வெளியிடுவதும் காலத்தின் தேவையாகும்.

இதனைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோர் குறித்து எத்தகைய விடயங்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற தகவல் அடங்கிய அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கான முயற்சியினை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை முன்னெடுத்து வருகின்றது.

இதன்படி சிறுபான்மையோர் குறித்து அதிக கரிசனைக்குரிய விடயங்களான அரசின் தன்மை, மதம், மொழி, அடிப்படை உரிமைகள், ஆட்சி முறைமை, தேர்தல் முறை, அதிகாரப் பகிர்வு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அபிப்பிராயங்கள் கோரப்படுகின்றன.

இது தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்க விரும்புவோர், கீழ்வரும் முகவரிக்கு தமது அபிப்பிராயங்களை அனுப்பிவைக்க முடியும். மின்னஞ்சல் மூலமாக அபிப்பிராயம் தெரிவிக்க விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சல் முகவரியினைப் பயன்படுத்தவும்.

அரசியல் விஞ்ஞானத் துறை
கலை கலாசார பீடம்
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில்.
தொ.பேசி: 094 67 2052852
மின்னஞ்சல்: newconsitutionseusl@gmail.com  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்