நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

🕔 January 31, 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவர் அரச ரகசியங்களை கசியவிட்டதற்காக நேற்று (30) 10 ஆண்டுகள் தண்டனை பெற்றார். இந்த நிலையில் இன்றும் (31) ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பெப்ரவரி 08ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக இம்ரான் கானின் பிரிஐ கட்சி தெரவித்திருக்கிறது.

ஊழல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான 170 வழக்குகள் இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்கு தற்போது 71 வயதாகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்