வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார்

🕔 February 3, 2016
Bangle - 02– பாறூக் ஷிஹான் –

ல்முனை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைக்கக் கொண்டு  சென்ற நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

தங்கத்தை பரிசோதனை செய்வதாக கூறி, வங்கியின் அடகு வைக்கும் பகுதியில் வைத்து, குறித் நகைகள் உடைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிடுகின்றார்.

22 கரட் பெறுமதியான தங்க காப்புகளே இவ்வாறு வங்கி உத்தியோகத்தரால் உடைக்கப்பட்டுள்ளன.

வங்கியில் தங்கத்தை மதிப்பிடுதவற்கும், பரிசோதனை செய்வதற்கும் தொழில்நுட்பமான பல முறைகள் இருந்தும், குறித்த வங்கி நிர்வாகம் இவ்வாறு நடந்து கொண்டமை சட்டத்தை மீறும் செயற்பாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.

நகைகள் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளபோதும், பாதிக்கப்பட்டவருக்கு சம்பந்தப்பட்ட வங்கி எவ்விதமான உத்தரவாதங்களையும் இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்