
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி – சுகயீனம் காரணமாக இலங்கையில் காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்ற போது உயிரிழந்தார்.
பித்தப்பை நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தமை – கடை நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5:20 மணியளவில் பவதாரணி உயிரிழந்ததாகவும் அவரின் உடலை நாளை சென்னை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சியொன்றுக்காக இலங்கை வந்துள்ள இளையராஜா, பவதாரணி உயிரிழந்த மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
பாரதி திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் பவதாரணி பாடிய ‘மயில் போலப் பொண்ணு ஒன்னு’ எனும் பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.




