தூஷண வார்தையை எழுதி, மோட்டார் சைக்கிளின் இலகத் தகடுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இருவர் கைது

🕔 January 20, 2024

சிங்கள மொழியில் பயன்படுத்தும் தூஷண வார்த்தையொன்றை, தகடொன்றில் ஆங்கிலத்தில் எழுதி, அதனை மோட்டார் சைக்கிளின் இலங்கத் தகட்டுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இரு இளைஞர்களை, மோட்டார் சைக்கிளுடன் பொரலஸ்கமுவ பகுதியில் போக்குவரத்துப் பொலிஸார் கைதுசெய்தனர்.

பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேகநபர்கள், மேற்படி தூஷண வார்த்தையைக் கொண்ட தகட்டை – மோட்டார் சைக்கிளில் பொருத்தி, பொரலஸ்கமுவ முழுவதும் பயணித்திருந்தனர்.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் – அவர்களை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும், அதனைப் புறக்கணித்து, அவர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியுள்ளனர். இருந்த போதும் இறுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சந்தேகநபர்களை நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, மேலதிகமாக மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பொரலஸ்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமேத விமலகுணரத்னவின் பணிப்புரையின் கீழ் மேலதிக விசாரணைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்