பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பறந்தது உத்தரவு

🕔 January 20, 2024

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது கடமை ரீதியாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) விடுத்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (18) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்த பின்னணியில் இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் – நாரம்மல பிரதேசத்தில் வாகனமொன்றை நிறுத்துமாறு உத்தரவிட்ட போதும், வாகனம் தொடர்ந்து பயணித்துள்ளது. இதனையடுத்து குறித்த வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸ் உப பரிசோதகர் – வாகன சாரதியை சுட்டுக் கொன்றார்.

தொடர்பான செய்தி: துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்