காட்டுமிராண்டித்தனமாக மாணவன் தாக்கப்பட்டதன் விளைவு: இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மதரஸாவை மூடுவதற்கு உத்தரவு

🕔 January 19, 2024

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2024.01.16ஆம் திகதி மேற்படிஅரபுக்கல்லூரியில் கற்கும் மாணவர் ஒருவரை, அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கிய விடயம், திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக கல்லூரி நிர்வாம் மற்றும் ஆசியர்களை விசாரனை செய்ய திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகவும், விசாரணை மேற்கொள்ளப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறித் அரபுக் கல்லூரிக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, திணைக்களத்தின் விசாரனை முடிவுறும் வரை 2024.01.19 ஆம் திகதி முதல் தற்காலிகமாக கல்லூரியை மூடி -பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் பாதுகாப்பாக மாணவர்ளை ஒப்படைக்குமாறு, கல்லூரிக்கு – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்படி மதரஸா – 1884ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட அரபுக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்