சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள்

🕔 February 3, 2016

Dhulanjali - 086
– அஷ்ரப் ஏ. சமத் –

ட்டத்துக்கு அமைவாக வாழ்வதற்கு, தந்தை எனும் வகையில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு துலாஞ்சலி பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

துலாஞ்சலி பிரேமதாஸ போலி நாணய நோட்டுக்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் சிக்கியபோது, அவரை, தான் ஜனாதிபதியாக இருந்தபோது காப்பாற்றி விட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்டையில்ட ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தன்னை இழிவு படுத்தி  வெளியிட்ட மேற்படி கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்படி கடித்தத்தினை துலாஞ்சலி அனுப்பி வைத்துள்ளார்.

தனது மகன் யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டமையினை அடுத்து, துலாஞ்சலி தொடர்பாக குறித்த கருத்தினை மஹிந்த வெளியிட்டிருந்தார்.

யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை அடுத்து ராஜபக்ஷ குடும்பத்தார் அனுபவிக்கும் நிலையை புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தாலும், தம்மை இலக்காகக் கொண்டு கூறப்பபடுகின்ற அரசியல் அவதூறுகளால் அவர்கள் தொடர்பில் அருவருப்பு ஏற்பட்டுள்ளதாக துலாஞ்சலி பிரேமதாஸ மேற்படி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தல் காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷ தம்மீது அவதூறுகளை சுமத்தியதாகவும் துலாஞ்சலி பிரேமதாஸ அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

யோஷித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டதிலோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதிலோ தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ள அவர், இவை அனைத்தும் ராஜபக்ஷ, தமது குடும்பத்தாருடன் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட நிலைமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது தந்தையாரான காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் தாயார் ஹேமா பிரேமதாஸ ஆகியோர், தமக்கும் தமது சகோதரர் சஜித் பிரேமதாஸவுக்கும் இயற்கை நியதிகள் மற்றும் சட்டத்துக்கு அமைய வாழ்வதற்கு கற்றுக்கொடுத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் விபரித்துள்ளார். 

தந்தை என்ற வகையில் அதனை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்குமாறு துலாஞ்சலி பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்கில் தாம் சாட்சியாளரோ அல்லது தொடர்புபட்டவரோ அல்லவெனவும் அவரது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை எதிர்கொள்வதற்காக அப்பாவி மக்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதால் பலன் எதுவும் இல்லை எனவும் துலாஞ்சலி தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ கூறும் வகையில் தாம் குற்றம் இழைத்திருந்தும் விடுதலை செய்யப்பட்டிருப்பின், அது தொடர்பில் பொலிஸ் விசாரணை நடத்தி, அதற்கு காரணமாக இருந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் எனவும் துலாஞ்சலி பிரேமதாஸ யோசனை முன்வைத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்