கிழக்கு மாகாண சபையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் காலமானார்

🕔 December 22, 2023

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் இன்று (22) காலமானார்.

சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது, இன்று வெள்ளிக்கிழமை (22) காலை உயிரிழந்தார்.

இவர் கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிதியமைச்சராகவும் நஜீப் ஏ. மஜீத் பதவிகளை வகித்திருந்தார்.

இவரின் தந்தை ஏ.எல். அப்துல் மஜீத் – மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1987ஆம் ஆண்டு அவர் பாசிச விடுதலைப் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இதன் பின்னர் தந்தையின் அரசியலை – மகன் நஜீப் ஏ. மஜீத் முன்னெடுத்தார்.

1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த நஜீப் ஏ. மஜீத் – அவரின் 67ஆவது வயதில் காலமானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்