வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’ வரி விதிக்கப்படும்

🕔 December 10, 2023

நாடாளுமன்றத்தில் கோரம் இல்லாமையினால் நாளை 9.30 மணிவரை அமர்வை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஒத்திவைத்தார்.

பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை சபையில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் வற் (VAT) திருத்தங்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்த நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முன்னர் வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இன்று மாலை04.30 மணி வரை விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆயினும் உறுப்பினர்களின் பங்கேற்பு இல்லாமையினால் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

விவாதத்தின் போது கோரம் இல்லாததால் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்