பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா?

🕔 December 7, 2023

புதிய தொழிநுட்ப கருவியொன்றை பஸ்களில் பொருத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த கருவிகள் பொருத்தப்படவுள்ளன.

அதன்படி, பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள வோக்கி-டோக்கி ரக கருவி மூலம் முறைகேடு தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிக்க முடியும்.

இவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடு பஸ்ஸின் உரிமையாளர், பயணிகள் போக்குவரத்து ஆணையம் மற்றும் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தெரிவிக்கப்படும்.

இதேவேளை, இந்த கருவியானது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைக்கப்பட்டுள்ளதால், குறித்த பஸ்ஸை கண்டுபிடித்து குற்றவாளியைக் கைது செய்யும் திறன் சட்ட அமுலாக்க துறையினருக்கு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்