அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம்

🕔 November 25, 2023

ரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையாக வழங்குவதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வாழ்வாதாரச் செலவுக் கொடுப்பனவாக வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையின் போது, இந்தத் தொகையை ஏப்ரல் மாதம் தொடக்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கவுள்ளதாகவும், ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் வழங்கப்படாத கொடுப்பனவுகள், ஒக்டோபர் மாதத்திலிருந்து மாதாந்தம் 05 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments